சீன நிறுவனங்களுக்கு சொந்தமான Baidu, Weibo செயலிகளையும் இந்தியா தடை செய்துள்ளது. ஏற்கனவே TikTok, UC Browser, Helo, Shareit, WeChat, CamScanner உள்ளிட்ட 59 சீன செயலிகளை தடை செய்த மத்திய அரசு, தொடர்ந்து அவற்றின் குளோன்களாக செயல்பட்டதாகக் கூறி ஜூலை 27ம் தேதி மேலும் 47 செயலிகளுக்கும் தடை விதித்தது.
அந்த 47 செயலிகளின் பட்டியலில் பிரபல Baidu, Weibo செயலிகளும் இடம்பெற்றுள்ளன. தற்போது அவை இரண்டும் பிளே ஸ்டோர் மற்றும் ஐபோன் ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.