செப்டம்பர் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் – இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

Share

சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 210-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இங்கிலாந்தில் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது இங்கிலாந்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

இனி மேலும் பள்ளிகளை மூடுவது நல்லதல்ல. பள்ளிகளில் மாணவர்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பான விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

மாணவர்களின் பள்ளிப் படிப்பு தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. இனி ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டாலும் பள்ளிகள் மூடல் என்பது கடைசி பட்சமாக இருக்கும்.

மாணவர்கள் தங்கள் கல்வியை தவறவிட்டால் நாடு பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும். எனவே கொரோனா பரவல் முற்றிலும் குறையாமல் இருந்தாலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் படிப்பினை தொடர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

சீண்டும் அமெரிக்கா: கோபத்தில் சீனா

Admin

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய்

Admin

இந்து மதத்தை விமர்சிப்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் – நடிகர் சரத்குமார் கருத்து

Admin

Leave a Comment