சிங்கப்பூரில் அமைய உள்ள உலகின் மிக உயரமான 2 கோபுரங்களின் கட்டுமானப் பணி மலேசியாவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
சிங்கப்பூரின் புக்கிட் மேரா மாவட்டத்தில 630 அடி உயரத்தில் 2 கோபுரங்களை கட்டப்பட உள்ளது.
இதற்கான கட்டமைப்புகள் மலேசியா எல்லையில் உள்ள செனாய் என்ற இடத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
முன்கூட்டியே வடிவமைக்கப்படும் கட்டுமானப் பகுதிகள், இறுதியாக கோபுரங்கள் அமைய உள்ள இடத்துக்கு நகர்த்தப்படும் என்று கட்டுமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. பரபரப்பான இடத்தில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் கட்டுமான முறை பின்பற்றுவதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது