தி நியூயார்க் டைம்ஸின் மத்திய கிழக்கு நிருபராக பணிபுரியும் பத்திரிகையாளர் விவியன் யீ என்பவர், லெபனான் குண்டுவெடிப்பு பற்றி தகவல்களை அறிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது ஒருவர் காயமடைந்த புறாவிற்கு பாட்டில் மூடியில் தண்ணீர் ஊற்றிக் கொடுப்பதைக் கண்டுள்ளார்.
அவரின் பெயர் அப்தெல் சலாம் என்றும், அவர் சீரியா நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டு மனிதனின் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
இதுபோன்ற சிலரின் மனிதாபிமானம் மிக்க செயல்களால்தான் இன்னும் உயிரோடு இருக்கமுடிகிறது என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அணுகுண்டு பூமியிலும் மறிக்கவில்லை மனிதம்..