மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி அறிவித்த பிரதமர்…

Share

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகா இணைந்து ஒரு கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, அது தற்போது மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இந்த அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் ஆஸ்திரேலிய அரசு, அந்த தடுப்பூசிக்காக 18 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.135 கோடி) மதிப்பில் ஒப்பந்தம் போட்டுள்ளது.

இதுபற்றி அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரீசன் நேற்று கூறும்போது, “ ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, உலகின் மிக முன்னேறிய மற்றும் நம்பிக்கைக்குரிய தடுப்பூசி ஆகும். இதற்காக நாம் ஒப்பந்தம் போட்டுள்ளோம். இந்த தடுப்பூசி ஒவ்வொரு ஆஸ்திரேலியருக்கும் கிடைக்கும்” என கூறினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “ இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற சோதனை வெற்றி அடைந்தால், நாம் அதை உற்பத்தி செய்வோம். அதன்மூலம் நாமே வினியோகிக்கலாம். 2½ கோடி ஆஸ்திரேலிய மக்களுக்கு அந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும்” என குறிப்பிட்டார்.

கொரோனா தடுப்பூசிக்காக ஆஸ்திரேலியா போட்டுள்ள முதல் ஒப்பந்தம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 


Share

Related posts

மாஸ்க் போட்டு நாட்டுப்பற்றை நிரூபித்த ட்ரம்ப்

Admin

ஊதா நிற மின்னல்கள் நம் மனதை மயக்கும் : வைரல் வீடியோ

Admin

கமலா ஹாரிஸ் : சென்னை தாய்… ஜமைக்கா தந்தை… யார் இந்த கமலா ஹாரிஸ்?

Admin

Leave a Comment