சீனாவில் திறக்கபட்ட தியேட்டர்கள்-மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Share

சீனாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் பரவத்தொடங்கிய கொரொனா வைரஸை பிப்ரவரி மாதத்துக்குள் கட்டுக்குள் கொண்டுவந்தது, இதே காலகட்டத்தில் உலகில் மற்ற நாடுகளுக்கு கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவத் தொடங்கியது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் வைரஸ் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன.

இந்த நிலையில் நோய்த் தாக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்திய சீன அரசு தற்போது திரையரங்குகளைத் திறந்துவிட்டுள்ளது.கொரோனா நோய்த்தொற்று பதிவு செய்யப்படாத பகுதிகளில் திரையரங்குகளைத் திறக்கப்பட்டுள்ளன.

சமூக இடைவெளியுடன் கடைபிடிப்பவர்கள் மாஸ்க் அணிந்த ரசிகர்கள் மட்டுமே திரையரங்குக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.திரையரங்கங்கள் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் செல்பி எடுத்து புகைப்படங்களைப் சமுக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.


Share

Related posts

கொரோனா சோதனையில் இந்தியா இரண்டாம்இடம்: அதிபர் டிரம்ப்

Admin

ஊதா நிற மின்னல்கள் நம் மனதை மயக்கும் : வைரல் வீடியோ

Admin

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Admin

Leave a Comment