டெலிகிராம் செயலியில் வாய்ஸ் கால் அறிமுகம் செய்யப்பட்டு நான்கு வருடம் ஆகிவிட்டது. இந்தநிலையில், டெலிகிராம் செயலியில் வீடியோ கால் அம்சம் இந்த ஆண்டு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்சமயம் டெலிகிராம் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டுள்ள வீடியோ கால் அம்சம் செயலியின் 7.0 வெர்ஷனில் வழங்கப்படலாம்.என்றும் உடனடியாக ஆண்ட்ராய்டு செயலியில் இந்த அம்சத்தை இயக்க விரும்பினால், மைக்ரோசாப்ட் ஆப் சென்டர் மூலம் கனெக்ட் செய்து புதிய ஏபிகே வெர்ஷன் டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்புறம் டெலிகிராம் பயனாளர்களே இனி உங்கள் காட்டில் மழைதான்..